சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை அருகே மார்க்கெட் ஃபார்ம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயதான சேகர். இவரது தனது காதல் மனைவி பிரித்திகா. சேகர் ஒரு தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.


 சேகர் கடந்த சில மாதங்களாக அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்கள் குளிக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அதை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக பார்த்து ரசித்து வந்துள்ளார். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டு பெண் குளிக்கும் போது, அதை வீடியோ எடுத்துள்ளார். இதைபார்த்து அதிர்ந்த அந்த பெண், நேராக சேகரின் வீட்டில் வந்து அவரது மனைவி முன்னிலையில் அவரை அறைந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 


அந்த நேரத்தில், சேகரின் மனைவி செல்போனை சோதித்து பார்த்ததில் எந்தவொரு வீடியோ காட்சியும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து, சேகரின் மீது அவரது மனைவிக்கு சந்தேகம் வரவே, கண்காணிக்க தொடங்கியுள்ளார். 


ஒருமுறை சேகர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து சோதனை செய்து பார்த்ததில் தன் சகோதரி உட்பட பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், வாசலில் கோலம் போடும்போது தெரியும் அசைவுகள் போன்ற வீடியோ காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களும் இருந்துள்ளது. 


இதை இப்படியே விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று எண்ணி,உடனடியாக கணவரின் செயலுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என அந்த செல்போனுடன் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது புகார் அளித்துள்ளார். இதையடுத்து சேகர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஷீலா மேரி, தன் கணவன் என்று பாராமல் புகார் கொடுத்த மனைவியை பாராட்டினார். சேகர் வசித்து வந்த பகுதியில் பெண்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண