மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆந்திரா - ஒரிஸா எல்லையிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த 20 பேர் கஞ்சா கடத்தலுக்கு இடைத் தரகர்களாக செயல்படுவதாக மதுரை எஸ்.பி சிவ பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர் மீது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 5 காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 கிலோ கஞ்சா கடத்தல் வழக்குகளில் 8 கோடியே 18 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களின் 249 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் வாயிலாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டில் 150 க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 1000 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 20 பேர் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தலுக்கு இடைத் தரகர்களாக செயல்படுகிறார்கள், ஆந்திரா - ஒரிஸா எல்லையிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது" என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்