மதுரை  செல்லூர் ஐயனார் கோயில் தெரு பகுதியை சேர்ந்த  முகம்மது சலீம் என்ற இளைஞர் கடந்த ஓருவருடத்திற்கு முன்பாக மதுரை அண்ணா பேருந்து நிலைய பகுதி வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் ஏற்கனவே வேலை செய்த ஹோட்டலுக்கு  மீண்டும் சென்ற நிலையில்  ஹோட்டல் அருகே மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது அபி என்பவருக்கு சொந்தமான செல்போன் கடைக்கு சென்று அங்குள்ள ஊழியரிடம் பேசி கொண்டிருந்துள்ளார்.




அப்போது செல்போன் கடையில் ஊ சொல்றியா பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது  மதுபோதையில் இருந்த சலீம் குத்து  பாடலான ஊ சொல்றியா பாட்டு போட்டு சவுண்டு வைக்க வேண்டும் நான் டான்ஸ் ஆடனும் என செல்போன் கடை ஊழியரிடம் கூறியுள்ளார். அதற்கு ஊழியர் முடியாத என்று கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சலீம் இரு உன் கடையில் பெட்ரோல் குண்டு போடுறேன் என கூறிவிட்டு சென்ற சில நிமிடங்களில் திரும்பிய சலிம் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் இப்போது பாட்டு சவுண்டு வை இல்லையென்றால் பெட்ரோல் குண்டு வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் செல்லும் கடை ஊழியர் இங்கிருந்து போ என சலீமிடம் கூறியுள்ளார்.




இதனையடுத்து சில நொடிகளிலயே கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்த உணவகத்தில் அடுப்பில் பற்றவைத்த சலீம் பெட்ரோல் குண்டை செல்போன் கடை மீது அசால்டாக தூக்கி எறிய பெட்ரோல் குண்டுவெடித்து கடையில் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக கடைக்குள் பெட்ரோல் குண்டு விழுகாத நிலையில் அங்குள்ள ஊழியர்கள் காயமின்றி தப்பினர். உடனடியாக செல்போன் கடை ஊழியர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சலீமை கைது செய்து  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.




ஒரு பாட்டுக்கு சவுண்டவைக்காததுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுவங்களா என  அங்கு கூடியிருந்த பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே அண்ணா பேருந்து நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள போதே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண