உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தனிப்பிரிவு போலீசார், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 51 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய காத்திருந்தது கண்டறியப்பட்டது.


 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது. ஜோ.மீனாட்சிபுரம் விலக்கில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய காத்திருந்தது கண்டறியப்பட்டது.

 

8 கிலோ கஞ்சா மற்றும் 51 ஆயிரம் ரொக்கம்

 

 கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர், மதுரை முனிச்சாலையை சேர்ந்த நந்தக்குமார் என்ற இந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 51 ஆயிரம் ரொக்கம், செல்போன்களையும் பறிமுதல் செய்து எழுமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எழுமலை காவல் நிலைய போலீசார் கஞ்சா கடத்தி வந்த சேகர், நந்தக்குமார் என்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.