திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழா நேற்று முந்தினம் ஐந்தாவது நாள் முக்கிய நிகழ்வாக  சூரசம்ஹாரம் லீலை மதியம் திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள சன்னதி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் லீலையை காண வந்திருந்தனர். அப்போது இந்த விழாவை காண வந்த  மதுரை திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த வரதன் என்பவரிடமிருந்து 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். எனவே இதுகுறித்து போலீசாருக்கு வரதன் தகவல் கொடுக்கவே விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருடர்களை தேடும் பணியில் தீவிரப்படுத்தினர்.



 

இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தென்படவே அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருச்சியை சேர்ந்த பெண் திருட்டு கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. எனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைசென்று வந்த நான்கு பெண்களை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி இவரது மகள் மஞ்சுளா தேவி, முத்துலட்சுமியின் மருமகள் லட்சுமி ஆகியோர் என்பதும் மதுரை மேலூரை சேர்ந்த ஜெயந்தி லலிதா ஆகிய நான்கு பேரும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 



தொடர்ந்து இவர்களுக்கு தகவல் அளித்து மதுரை வெளிச்சம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் சிறையில் இருந்தபோது இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பரங்குன்றம் போலீசார் நான்கு பெண்களை கைது செய்து இவர்களுக்கு தகவல் அளித்த கவிதாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

 





 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண