உசிலம்பட்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் 70 வயது முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த 90 வயது முதியவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த  டி- குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இராமசாமி. 70 வயது முதியவரான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான வேலுச்சாமி என்ற 90 வயது முதியவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பணம் கேட்டுச் சென்ற வேலுச்சாமியை இராமசாமி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, இராமசாமியை வாங்கருவாளால் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இராமசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு ? - அமைச்சர் கவனத்திற்கு சென்ற கோரிக்கை




 


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜூன் முதல் வாரத்தில் 500 நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையத்தை ஒரே நாளில் முதல்வர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இராமசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமியை கையகப்படுத்திய உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 70 வயது முதியவரை 90 வயது முதியவர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sarath kumar: ‘இன்னும் 150 வயது வரை உயிர் வாழ்வேன்’...அந்த வித்தை உங்களுக்கு தெரிஞ்சிக்கனுமா? இதை செய்யுங்க - சரத்குமார்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண