மதுரையில் மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் பெண் துணை தாசில்தார் மீது வழக்கு பதிவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டில் சோதனை - ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


நிதி மோசடி தொடர்பாக பாதிப்பு:


மதுரையை சேர்ந்த BLESSY அக்ரோ லிமிடெட் நிறுவனம் ஒன்றின் நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர் தனது இரு சொத்துக்களை இளங்கோ, பழனியப்பன் என்பவர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

 

இதையறிந்த முதலீட்டாளர்கள் மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை  விற்பனை செய்தது தவறு, அந்த சொத்துக்களை ஏலம் விட்டு தங்களது முதலீட்டு தொகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 


 

இதனையடுத்து சொத்துக்களை ஏலம் விட மாவட்ட வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை அலுவலராக இருந்த பெண் அதிகாரியான தனபாண்டி தற்போது தேர்தல் பிரிவு துணைத் தலைசில்தராக இருந்து வருகிறார்.

 

தனபாண்டி அந்த சொத்துக்களை ஏலம் விடாமல் கிடப்பில் போட்டு தாமதப்படுத்துவதற்காக 1.6 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுதது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம்  இருப்பதை அறிந்த பெண் துணை வட்டாச்சியரான தனபாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 


இதனையடுத்து மாட்டுத்தாவணி பொன்மேணி கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று சோதனைநடத்தி ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் பெண் துணை தாசில்தார் மீது வழக்கு பதிவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டில் சோதனை செய்து, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரை மாவட்டதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?