மதுரையில் 14 வயது பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் - 3 மணிநேரத்தில் மீட்டு காவல்துறையினர் !
பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திசென்ற நபர்களை 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட தனிப்படை காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்

மதுரையில் 14 வயது பள்ளி மாணவனை கடத்தி 2 கோடி கேட்டு மிரட்டல் - 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறையினர் - தப்பிய கடத்தல் கும்பல்.
ஆட்டோவில் சிறுவன் கடத்தல்
Just In



மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலெட்சுமி. இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து படித்து வருகிறார்.
வழக்கம் போல ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனை ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி என்பவரோடு, மாணவனையும் கத்தியை காட்டி கடத்தி வைத்து கொண்டு மைதிலி ராஜலெட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது. அதில் 2 கோடி ரூபாய் பணத்தோடு வராவிட்டால் சிறுவனை கொலை செய்வதாக கூறியதோடு, இதனை காவல்துறையிடம் கூறினாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிறுவனை கடத்தி மிரட்டிய கடத்தல் கும்பலை விரட்டிசென்றது.
- Rahul Gandhi: மணிப்பூர் போங்க; பிரச்சினைகளை கேளுங்க: பிரதமருக்காக வீடியோ வெளியிட்ட ராகுல்
காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து பின்தொடர்வதை பார்த்த கடத்தல் கும்பல் 7-ம் வகுப்பு மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிசென்றது. இதனையடுத்து சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்து தப்பி சென்ற கடத்தல் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திசென்ற நபர்களை 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட தனிப்படை காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம்! வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஊர்மக்கள்! ஆர்.பி உதயகுமார் ஆதரவு
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கணவன்களுக்கு கல்தா! காதலர்களுடன் எஸ்கேப்! பிரதமரின் வீடு கட்டும் நிதியில் 11 பெண்கள் செய்த காரியம்