4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பள்ளிகல்வித் துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்த வேண்டும். அதேபோல 28.04.2023 பள்ளிகளின் கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு ஆண்டின் மூன்றாம் பருவத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும் , 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , மாவட்டங்கள்  10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும்.


மேலும், 28.04.2023 பள்ளிக் கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தொடக்க கல்வி இயக்குனர்  அனுப்பியுள்ளார்.