ஒரகடம் அருகே தொழிற்சாலை உதிரி பாகங்கள் இருக்கும் போது கதவை திறந்த லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே இருவர் பலியானார்.

 


 

 

காஞ்சிபுரம் மாவட்டம் புல்லலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். இவர் லாரி ஓட்டுநர். இன்று 3:30 மணி அளவில்  எறையூர் ரோட்டில் உள்ள ஜன் ஆட்டோமேட்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் லோடு ஏற்ற தனது வாகனத்தை கம்பெனி முன்பு நிறுத்தியுள்ளார். லாரியின் பின்பக்க இரும்பு கதவை திறக்கும் போது  பக்கத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒயரில் பட்டு துடித்துக் கொண்டிருந்துள்ளார்

 

 அதை பார்த்த பக்கத்து நிறுவனத்தில் டிரைவராக இருக்கும் கொளத்தூர் பகுதியில் வசிக்கும் ராமு என்பவர் அவரைக் காப்பாற்ற  அவரை பிடித்து இழுத்து உள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவரும்  இறந்துள்ளனர். தகவல் அறிந்த ஒரடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

மழை


தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை  மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


04.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.