மயிலாடுதுறை மாவட்டம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு பாண்டிச்சேரி மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை முழுவதும் தடுக்க முடியவில்லை என்றாலும், கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

Continues below advertisement

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவது மற்றும் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று (14.11.2025) நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையின்போது, காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 500 எண்ணிக்கையிலான பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாப்படுகை ரயில்வே கேட் அருகே சிக்கிய கடத்தல் கும்பல்

நேற்று, மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில், மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, PY02 S 7225 JUPITOR மற்றும் PY02 W 9803 BURGMAN ஆகிய பதிவு எண் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையில், அவர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் சுரேஷ் மற்றும் லூக்காஸ் ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக பாண்டிச்சேரி சாராயத்தைப் பெருமளவு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Continues below advertisement

500 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய்  80,000 மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்

இந்தச் சோதனையின்போது, கடத்தி வரப்பட்ட 180 மி.லி. அளவுள்ள, மொத்தம் 500 எண்ணிக்கையிலான பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய மது பாட்டில்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேலும், எதிரிகள் மது கடத்தலுக்குப் பயன்படுத்திய சுமார் ரூ. 80,000/- மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒருவன் கைது, மற்றொருவன் தேடப்படும் குற்றவாளி

மேற்கண்ட குற்றச் செயலில் ஈடுபட்ட எதிரிகளில் ஒருவரான சுரேஷ் என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். ஆனால், அவருடன் வந்த மற்றொரு எதிரியான லூக்காஸ், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார், அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுளாளார். 

கைது செய்யப்பட்ட குற்றவாளி சுரேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தப்பியோடிய லூக்காஸ் என்பவரை விரைந்து கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூபாய் 80,000 மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் இரண்டும் பொது ஏலம் விடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

சட்டவிரோத மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனைச் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என உறுதி 

பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாகப் புகார் அளிக்க விரும்பினால், இலவச உதவி எண்ணான 10581 அல்லது 8870490380 என்ற எண்ணிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்றங்கள் குறித்து மேலும் ஏதேனும் விவரங்கள்