காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். 40 வயதான இவர் இன்று தனது பணியை முடித்துவிட்டு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரை வழிமறித்துள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், காரில் இருந்த அழகேசனை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அழகேசன், சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா, டி.எஸ்.பி. மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை கைப்பற்றிய அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகை தீவிரமாக தேடி வருகின்றனர்.