விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி சூலக்கரை. இந்த பகுதியில் வசித்து வருபவர் பானுப்பிரியா. 31 வயதான அவர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விக்னேஷ். அவருக்கு வயது 37. அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பழங்கானத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.


 விக்னேஷ் – பானுப்பிரியா தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் பானுப்பிரியாவின் சொந்த ஊரான முதுகுளத்தூரில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி படித்து வருகிறான். விக்னேஷிற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள பழங்காநத்தம்தான் சொந்த ஊர் ஆகும், அங்கு அவருக்கு சொந்தமாக 7 வீடுகள் உள்ளது. மேலும், விக்னேஷின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அங்குதான் வசித்து வருகின்றனர்.




விக்னேஷிற்கு பழங்காநத்தம்தான் சொந்த ஊர் என்பதால், அவர் தனது மனைவி பானுப்பிரியாவை மதுரைக்கு பணியிட மாற்றம் பெற்று வருமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், பானுப்பிரியா நேற்று இரவு வழக்கம்போல பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, விக்னேஷ் மதுபோதையில் இருந்துள்ளார்.


மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல்..! அடுத்த போக்சோ வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..! 


மதுபோதையில் இருந்த விக்னேஷ் பானுப்பிரியாவிடம் பணியிட மாற்றம் பெற்று மதுரைக்கு வருமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தினால் பானுப்பிரியா மிகவும் மனமுடைந்துள்ளார். பின்னர். சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் பானுப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார்.




இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் பானுப்பிரியா வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது பெல்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் விக்னேஷ் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், பானுப்பிரியாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்தது.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சூலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது கணவர் விக்னேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பானுப்பிரியாவை அவரே பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பானுப்பிரியாவின் கணவர் விக்னேஷை காவல் நிலையம் அழைத்து வந்து, தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நகரும் விண்கற்களை கண்டிபிடித்த அரியலூர் ஆசிரியர்கள்.. பாராட்டிய நாசா!