திருவாரூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்த சேத்தப்பா என்கிற நபர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமி அலறல் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

 

உடனடியாக பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேத்தபாவை தேடிச் சென்ற பொழுது அந்த இடத்தில் இருந்து சேத்தப்பா தப்பிச் சென்றுள்ளான். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு பின்னர் வீடு திரும்பினார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேத்தப்பாவை காவல்துறையினர் தேடி அந்த நிலையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சேத்தப்பாவை கைது செய்து அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சேத்தப்பா தனியார் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிந்து வருவதாகவும் மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் சேத்தப்பாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலமாக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை காவல்துறை சார்பில் பெற்று தரப்படும் மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் பெற்றோர்களும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.