கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளியை அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் வீரேந்திரன் வயது ( 33). விவசாயி. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததாக பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.


அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று வீரேந்திரனை தேன்கனிக்கோட்டை காவல்துறையினர்  அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் இவர் தான் மாற்று திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டு அவர்மீது வழக்குபதிவு செய்யப்படடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


 




இந்த வன்கொடுமை வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனால் வீரேந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார் எனக் கூறப்படுகிறது .


மேலும் அவர் வன்கொடுமை  வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே இவருக்கும், அவருடைய உறவினர்களுக்கும் சொத்து  தொடர்பாக பிரச்சினைகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளாராம் . 




இந்நிலையில் கடந்த ஆண்டு வீரேந்திரன் சிறையில் இருந்து   ஜாமீனில் வெளியே வந்தார்.  கிராமத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த வீரேந்திரன் ஆயுள் தண்டனை, சொத்து பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, வீரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வீரேந்திரனின் குடும்பத்தினரிடம் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீரேந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‛அன்புள்ள அம்மா, 2 அக்கா, மாமா, மாமா மகள்களை நன்றாக பார்த்து கொள்ளவும். உங்களுக்கு எப்போதும் துணை இருப்பேன். இந்த சொத்தால் என் வாழ்க்கை, உயிர் போச்சு,’ என்று எழுதியுள்ளார்.


காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தளி அருகே ஜாமீனில் வந்த குற்றவாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!