இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் போட்டோ பதிவிட்ட பேராசிரியை கல்லூரியை விட்டு விலகக்கூறிய விவகாரம் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. 

Continues below advertisement

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதனை கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தங்களது செல்போனில் பார்த்துள்ளனர்.இதனைக் கண்ட ஒரு மாணவரின் தந்தை இந்த விவகாரத்தை பெரிதாக்கியுள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகாரளித்துள்ளார் அந்த மாணவரின் தந்தை. அந்த புகாரில் '' சமீபத்தில் பேராசிரிரை ஒருவரின் நீச்சல் உடை புகைப்படத்தை என் மகன் பார்ப்பதை பார்த்து நான் திகைத்துவிட்டேன். அவர் வெளிப்படையாக இப்படி போஸ் கொடுத்துள்ளார். 

Continues below advertisement

இது எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு பேராசிரியை தன்னுடைய சோஷியல் மிடியாவில் இப்படியான புகைப்படத்தை பகிர்வதில் ஒரு மாணவனின் பெற்றோராக எனக்கு வருத்தம். இது போன்ற மோசமான அநாகரீத்திலிருந்து எனது மகனை நான் பாதுகாக்க முயற்சித்தேன். ஆனால் ஒரு ஆசிரியையின் உடலை இப்படி சோஷியல் மீடியாவில் பார்ப்பது மோசமானது. முறையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். மாணவரின் அப்பா கொடுத்த புகாரால் அந்த பேராசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கல்லூரியின் மரியாதையை கெடுத்த காரணத்துக்காக ரூ.99கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் பேராசிரியைக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். இது ஆசிரியையின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடும் கதையாக உள்ளதாக பலரும் பேசியுள்ளனர். லாக் செய்யப்பட்ட அவருடைய இன்ஸ்டா கணக்கில் இருந்து புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட்போல எடுத்து பரப்பப்பட்டுள்ளது. இது ஒருவித குற்றம். இது ஒருவித பாலியல் துன்புறுத்தல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த பேராசிரியை, '' என்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை மாணவர் ஒருவரின் தந்தை பார்ததாகவும் அது கல்லூரி நிர்வாகத்தின் மரியாதையை கெடுத்துவிட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். அந்த இரண்டு போட்டோக்களும் என்னுடைய அறையில் எடுக்கப்பட்டது. அது இன்ஸ்டா ஸ்டோரியாக கடந்த ஆண்டு வைக்கப்பட்டது. நான் கல்லூரியில் பணிக்கு சேர்வதற்கு முன்பு அது. பொதுவாக இன்ஸ்டா ஸ்டோரி என்றாலே ஒரு நாளில் மறைந்துவிடும். ஆனால் அப்போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை இப்போது பரப்பி இருக்கலாம். அதுமட்டுமின்றி என்னுடைய இன்ஸ்டா பக்கம் லாக் செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் இல்லாமல் யாராலும் என்னுடைய புகைப்படங்களை பார்க்கவும்முடியாது. என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய புகைப்படங்களை பரப்பியுள்ளனர். இது தொடர்பாக புகாரளித்துள்ளேன். மேலும்கல்லூரி நிர்வாகம்மீதும் வழக்க தொடர உள்ளேன் எனக் குறிப்பிட்டார்.