கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சீலேப்பள்ளிகிராமத்தைச் சேர்ந்த  வெங்கட்டப்பன் வயது (66) இவருக்கு இன்று  காலை  தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது தக்காளி தோட்டத்திற்கு மிதிவண்டியில் சென்றுள்ளார். அப்போது தக்காளி தோட்டத்தில் இருந்த அவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து சீலேப்பள்ளி- மாதிநாயனபள்ளி கிராம சாலைக்கு ஓடி வந்த போது மீண்டும் பின்தொடர்ந்து ஓட ஓட விரட்டி  கழுத்து மற்றும் இடது வாய்ப்பகுதியில் வெட்டியதில் முதியவர் படுகயங்களுடன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இது குறித்து  தகவலறிந்த  வேப்பணப்பள்ளி போலீஸார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  இறந்துபோன வெங்கடப்பாவின் மகன் முருகேசன்  ஓசூர் டைட்டன் கம்பெனியில் சமையலராக இருந்தார், இவர்  கடந்த ஆண்டு  பணியில் இருந்து போது கொரோனா தொற்றால்  இறந்ததாக கூறப்படுகிறது.


 




 


இதுகுறித்து அவரது மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன் கணவரின் சாவில் மர்ம இருப்பதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து சில மாதங்களில்  முருகேசன் மனைவி ஜமுனா, குழந்தைகள் வெங்கடேசன்,வேலன் ஆகிய மூவரும்   சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஒரே ஆண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 




 


இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் வயது (83), அதே பகுதியை சேர்ந்தவர் அப்பாபுலி வயது (40), கூலி தொழில் செய்து வருகிறார். பெருமாள் நேற்றிரவு அவருடைய மாந்தோப்பில் உள்ள குடிசையில் இரவு படுத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் அப்பாபுலி வந்துள்ளார். இவரை பார்த்த பெருமாள். இந்த நேரத்தில் எதற்காக இங்கு வந்தாய் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த அப்பாபுலி அப்பகுதியில் கிடந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெருமாள் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதை பார்த்த அப்பாபுலி அங்கு இருந்து தப்பித்து ஓடிவிட்டார் 



இதையடுத்து மயங்கி கிடந்த பெருமாளை பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் சடலத்தை கைப் பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.




அதனைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான அப்பாபுலியை தேடிவந்தனர். அப்போது அவர் அதேபகுதியில் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து அப்பாபுலியை பிடித்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்குள் ஏதேனும் முன்விரோத தகராறு உள்ளதா என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.