பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகாலி பகுதியில் இருந்து நான்கு வயது சிறுமியை மீட்டுள்ளனர். இது கடத்தல் வழக்கு என்று காவல்துறை கூறினாலும், படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆர்வலருமான டாக்டர் நரேந்திர தபோல்கரால் தொடங்கப்பட்ட அரசு சாரா அமைப்பான, அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி (ANIS), இது நரபலிக்காக செய்யப்படும் வேலை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளது.


ANIS அமைப்பு கருத்து


இந்த சம்பவம் குறித்து ANIS அமைப்பீடம் கேட்கும்போது நரபலி கொடுப்பதற்காக கூட்டி வந்திருக்கவும் வாய்ப்புண்டு என்கின்றனர். "இந்த வழக்கில் குழந்தைகள் நரபலி கொடுப்பதற்காக கடத்தி செல்லப்படவில்லை என காவல்துறை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனால் இந்த வியாழக்கிழமை அமாவாசை வருகிறது. எனவே அதற்கும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளை நாங்கள் சந்தித்துள்ளோம்," என்று ANIS அமைப்பை சேர்ந்த மிலிந்த் தேஷ்முக் கூறினார்.



அண்டை வீட்டாரின் உறவினர்கள்


தாரா ராஜா ஷேக் அளித்த காவல்துறை புகாரின்படி, ஜூலை 23 அன்று, தம்ஹானே வஸ்தியில் உள்ள அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவரது நான்கு வயது மகளைக் காணவில்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகாரின்படி, ஷேக் தனது மகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு தினமும் வேலைக்கு செல்லுவாராம். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஷேக்கின் அண்டை வீட்டாரின் உறவினர்கள் வித்யாசமாக ஏதோ செய்வதை கண்டுபிடித்தனர். 


தொடர்புடைய செய்திகள்: Maha Movie Director : "மஹா படம் குறித்து எனக்கே எந்த தகவலும் கிடைக்கல...!" - வேதனையில் புலம்பும் ஹன்சிகா பட இயக்குனர்..!


6 பேர் கைது


பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார், புனே ஊரக அதிகாரிகளுடன் இணைந்து ஜுன்னாரில் தேடுதல் வேட்டை நடத்தி, சந்தோஷ் சவுகுலே (41), விமல் சவுகுலே (28), சுனிதா அசோக் நலவாடே (40), அங்கிதா அசோக் நலவே (22), நிகிதா அசோக் நலவாடே (18) மற்றும் ஒரு சிறுவரை கைது செய்தனர். இந்த ஆறு பேரில் சவுகுலே என்ற இரண்டு பேர்தான் ஷேக்கின் அண்டை வீட்டாருக்கு வந்த விருந்தினர்கள். அவர்கள் இரு தினம் முன்பு அங்கு சென்றது உறுதி செய்யப்பட்டது. இவர்களோடு சேர்த்து 4 வயது சிறுமியும் மீட்கப்பட்டார். 



நரபலிக்காக கடத்தப்பட்டிருக்கலாம்


டிசிபி ஆனந்த் போயிட் கூறுகையில், “கடத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். முதல் பார்வையின்படி, நரபலிக்காக சிறுமி கடத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் அதன் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை இன்னும் சரியாக கண்டறியவில்லை", என்றார். பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் வழக்கை மனித கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர், மேலும் இந்த வழக்கு DYSP தத்தாத்ரிய சவானால் விசாரிக்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.