கேரளாவின் கோட்டயம் அருகேயுள்ள ஆசாரிபரம்பைச் சேர்ந்தவர் அவினாஷ்.  அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு துபாயுக்கு வேலைக்காக சென்றுள்ளார் அவினாஷ். கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். 


ஸ்ரீலக்‌ஷ்மி கர்ப்பம்..


சொந்த ஊருக்கு அவினாஷ் வந்த நிலையில் ஸ்ரீலக்‌ஷ்மி கருவுற்றார். மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவருடன் நேரம் செலவழிக்க அவினாஷ் விரும்பியுள்ளார். அதன்படி துபாய்க்கு செல்லும் ப்ளானை தள்ளி வைத்துள்ளார் அவினாஷ். ஆனால் அவினாஷின் முடிவு மனைவிக்கு பிடிக்கவில்லை. குழந்தை பிறக்கும் நேரத்தில் பணம் தேவை என்பதாலும், ஏற்கெனவே கடன் தொல்லை என்பதாலும் அவினாஷை மீண்டும் துபாய்க்கு செல்ல வற்புறுத்தியுள்ளார். பிரசவ நேரத்தில் மீண்டும் ஊருக்கு வந்தால் போதுமென கூறியுள்ளார். ஆனால் மனம் இல்லாத அவினாஷ், தற்போது கொரோனா என்பதால் வேலைக்கு செல்ல முடியாது. துபாயில் அனுமதி இல்லை என பொய்க்கூறி ஊரிலேயே இருந்துள்ளார்.




விஷம் குடித்து ப்ராங்க்..


கணவன் பொய்க்கூறிய விவகாரம் மனைவி லக்‌ஷ்மிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை வாயில் ஊற்றிக்கொண்டு கணவனை மிரட்டியுள்ளார். வெளிநாடு போவேன் என்று சொன்னால்தான் விஷத்தை துப்புவேன் என்று கூறியுள்ளார். மனைவியின் திடீர் பரபரப்பை பார்த்து மிரண்டுபோன கணவன் அவினாஷ், கண்டிப்பாக வெளிநாடு போவேன் எனக் கூறியுள்ளார். தலையில் அடித்து சத்தியம் செய்தால்தான் நம்புவேன் என லக்‌ஷ்மி தெரிவித்துள்ளார்.




Premgi denies Marriage: “எனக்கு கல்யாணமா? ஜாலியா இருக்கு” - காதல் குறித்து பதிலளித்த பிரேம்ஜி




உடனடியாக அவினாஷ் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். அப்போது  வாயில் இருந்த விஷத்தை எதிர்பாராத விஷமாக லக்‌ஷ்மி விழுங்கியதாக தெரிகிறது. இதனால் உடனடியாக அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிகிச்சைக்கு லக்‌ஷ்மியை அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லக்‌ஷ்மி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண