கேரளாவில் அமைந்துள்ளது பத்தினம்திட்டா. இந்த பகுதியில் அமைந்துள்ளது சரல்குன்னு.  இந்த பகுதியைச் சேர்ந்தவர் ரஷ்மி. இவரு்ககு வயது 23. இவரது கணவர் ஜெயேஷ். இவருக்கு வயது 29. ரஷ்மி இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.

வீட்டிற்கு வரவழைத்த பெண்: 

அப்போது, ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் உண்டாகியுள்ளது. பின்னர், அவரிடம் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று ரஷ்மி அழைத்துள்ளார். சல்லாப ஆசையில் ரஷ்மியின் வீட்டிற்குச் சென்ற அந்த இளைஞரிடம் ரஷ்மி பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், ரஷ்மியின் அருகில் அவர் சென்றபோது அங்கே ரஷ்மியின் கணவர் ஜெயேஷ் இதை அனைத்தையும் மறைந்திருந்து செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். 

ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின்:

பின்னர், ஜெயேஷ் அவரது மனைவி ரஷ்மியுடன் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளார். அப்போதுதான் தான் மாட்டிக்கொண்டதை அந்த இளைஞர் உணர்ந்துள்ளார். பின்னர், அந்த வாலிபரை கட்டி தொங்கவிட்டுள்ளனர். பின்னர், அவரை நிர்வாணப்படுத்தி அவரின் ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின்களை அடித்துள்ளனர். அவரது கை மற்றும் கால்களில் உள்ள விரல் நகங்களையும் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து பிடுங்கியுள்ளனர். 

அந்த இளைஞர் வலியால் துடிப்பதை இருவரும் பார்த்து ரசித்துள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த செல்போன், 6 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். பின்னர், அவரது வாயில் துணியை கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு இறக்கிவிட்டுள்ளனர். அப்போது, அவரது முனகல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்ற ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். 

சைக்கோ கணவன் - மனைவி:

மருத்துவமனையில் இவரது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின்கள் அடிக்கப்பட்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், தகவல் அறிந்த போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்காெண்டனர்.  இதையடுத்து, ஆரன்மூளா போலீசார் ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மியை கைது செய்தனர். 

கணவன் மனைவி இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வந்தது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரஷ்மியும், ஜெயேஷும் இணையத்தில் இளைஞர்களை குறிவைத்துள்ளனர். ரஷ்மி அதில் இளைஞர்களை பேசி மயக்க உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்துவிட்டு அந்த இளைஞர்களை சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

கடந்த ஓணம் பண்டிகையின்போதும் இளைஞர் ஒருவரை வீட்டிற்கு வர வைத்து இதேபோல, அவரை கட்டி தொங்கவிட்டு அவரிடம் இருந்து பணம், நகைகளை பறித்தது மட்டுமின்றி அவரது ஆணுறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி ரசித்துள்ளனர். பின்னர், அவரது ஆணுறுப்பிலும் ஸ்டேபிளர் பின் அடித்து அதை ரசித்துள்ளனர். இதைக் கேட்டு போலீசார் இந்த சைக்கோ தம்பதியினரை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சல்லாபத்திற்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இதுபோன்று சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.