கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எரிந்த நிலையில் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.காவேரிப்பட்டணம் அருகே கச்சேரி மேல்கொட்டாய் மலையடிவாரத்தில் இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிரனுக்கு  தகவல் தெரிவித்தனா்.


அதன் பேரில், காவல்துறை சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அந்த பகுதியில் இருந்த ஒரு பையும், செல்போன் மற்றும் ஒரு கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர்  இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்த பெண்ணின் பெயா் ரஞ்சனி என்றும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் எனவும் தெரியவந்தது.  


 




 


மேலும் அந்த கடிதத்தில் என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை  என்றும், யார் மேலும் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும்,  எனக்கு வாழ பிடிக்கவில்லை என குறிப்பிட்டு இருந்தது. மேலும் என் உடல் கிருஷ்ணகிரி தான் வரும், வரும்போது என்னை பார்க்காதே என எழுதிய கடிதம் உள்ளது.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா,வயது (22) என்ற வாலிபர், ஐந்து வருடங்களாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் நண்பர்களாக பழகிவந்துள்ளார். நாள் அடைவில் அது காதலாக மாறியுள்ளது.


கார் டிரைவரான சூர்யா ரஞ்சினியை பார்க்க கேரளாவிற்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து இருவரும் சந்தித்தனர். அப்போது காதலியிடம் சூரியா  வீட்டின் வருமையை கூறி காதலியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா வேறு ஒரு பெண்ணுடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது.




 


சூர்யாவை தேடி ரஞ்சனி கிருஷ்ணகிரி  வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன்  தொடர்ப்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  மேலும் கடந்த ஆண்டு சூர்யா தனை ஏமாற்றி நகை மற்றும் பணம் பரித்ததாகவும், அவருடன் தனை சேர்த்து வைக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் சூரியா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறுது.


அதனைத்தொடர்ந்து கேரளாவுக்கு திரும்பி செல்லாமல் காவேரிப்பட்டணத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவேரிப்பட்டினம்  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் காதலன் சூர்யாவை  தேடி வருகின்றனர்