கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகேயுள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது நண்பர் நிதிஷ். இருவரும் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதில், நரபலிக்காக ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை கொலை செய்து சொந்த வீட்டில் புதைத்த சம்பவத்தை பற்றி கூறி காவல்துறையினரை அதிர வைத்தனர்.
கொலையாளிகளிடம் விசாரணை செய்த போலீசார்:
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின. விஷ்ணுவும் அவரது நண்பர் நிதிஷ்சும் இணைந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்காக பச்சிளம் குழந்தை ஒன்றை நரபலி முடிவு செய்தனர். இதற்காக விஷ்ணுவின் சகோதிரி குழந்தை பலிகொடுக்க தீர்மானித்து இதனை பற்றி விஷ்ணு தனது தந்தை விஜயன் தாய் சுமா மற்றும் சகோதிரியிடம் கூறியுள்ளார். இதற்கு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டர். மேலும் விஷ்ணுவின் சகோதிரிக்கு கல்லூரியில் ஏற்பட்ட தகாத உறவால் பிறந்த குழந்தை என்பதால் இச்செயலை செய்வதற்கு குடும்பத்தினர் அஞ்சவில்லை என்றும் கூறப்படுகின்றது. அதுமட்டும் இன்றி விஷ்ணுவும் அவரது குடும்பத்தினர் இணைந்து கர்ப்பம் தரித்த சம்வத்தையோ குழந்தை பிறந்த சம்பவத்தையோ அக்கம் பக்கதினருக்கு தெரியாமலும் சந்தேகம் வரமாலும் பார்த்துக்கொண்டனர்.
நரபலி சம்பவம் :
இதனையடுத்தே பச்சிளம் குழந்தை குடும்பத்தினர் நரபலி கொடுத்துள்ளனர். இச்சம்பவத்திற்க்கு பிறகு குடியிருந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு விஷ்ணுவின். குடும்பத்தினர். வேறொரு வீட்டில் குடியேறினர். திடீரென விஷ்ணுவின் தந்தையும் காணமல் போனார். அக்கம் பக்கத்தினர் விஷ்ணு மற்றும் அவரது தாயாரிடம் இதனை பற்றி விசாரித்தால் அவர்கள் யாரிடமும் முறையாக பதில் வழங்குவதில்லை என்றும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிதிஷ்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ்ணுவுக்கு அவரது தந்தை விஜயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்பொழுது நிதிஷ்சும் விஷ்ணுவும் இணைந்து விஜயனை கொலை செய்து தற்பொழுது தங்கியுள்ள வீட்டில் வைத்தே புதைத்தாகவும் பின்பு வீட்டில் மாந்தீரீக பூஜைகளையும் செய்ததாகவும் நிதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தோண்டி எடுக்கப்பட்ட உடல்பாகங்கள்:
இதனிடையே விஷ்ணுவின் தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். ஆனால் சில எழும்புகள் மட்டுமே கிடைக்கப்பெற்றது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட சில உடல்பாகங்களை பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே குழந்தையின் உடல் புதைக்கப்ட்ட வீட்டின் மாட்டுத்தொழவத்தின் இடத்திலிருந்து உடலை தோண்டி எடுக்கும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்ற சம்வபத்தில் ஈடுப்பட்ட விஷ்ணு திருட்டு வழக்கில் கைது செய்ய முற்பட்டபோது தப்பிக்க முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டுத்தால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் கூடுதலாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் கருத்தப்படுகின்றது. விஷ்ணுவின் தாய் சுமா மற்றும் அவரது சகோதிரி ஆகிய இரண்டு பேரையும் காவல்த்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.