தையல் தொழிலாளி தற்கொலை

கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் தனபாக்கியம். தையல் தொழிலாளி. இவர் கடந்த நான்கு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனபாக்கியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனபாக்கியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

மது விற்ற 5 பேர் கைது

 

கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை ஈடுபட்டனர். அப்போது கரூரில் நல்லரான் பட்டியைச் சேர்ந்த தங்கத்துரை, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, மன்மங்கலத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, சிவகங்கையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

கரூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் டவுன் போலீஸ் கட்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது கரூர் ஜவஹர் பஜார் கோவில் பஞ்சாயத்து கொண்டிருந்த அதே பொதுச் சேர்ந்த வினோத் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்தஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல்  செய்யப்பட்டன.