கரூர் மாவட்டம் அமைந்துள்ளது லாலாபேட்டை பகுதி. இந்த பகுதியில் காவிரி ஆறு பாய்கிறது. காவிரி ஆற்றில் குடும்பத்துடன் சாமி கும்பிட வந்த இரண்டு இளைஞர்கள் நீர் மூழ்கி உயிரிழந்ததால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தகவல் கொடுத்தும் வராததால் உறவினர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஸ்வா (24). ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18). இவர்கள் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நேற்று மூன்றாவது சனிக்கிழமை என்பதால் குலதெய்வ கோவிலுக்கு வந்து செல்வதற்காக வந்து ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்ல ஆற்றில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மணல் சூழலில் மாட்டிக் கொண்ட இருவர்கள் தண்ணீரில் அடித்து சென்றனர். மேலும் இரண்டு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் கரை ஒதுங்கினர். இதில் விஷ்வா, புருஷோத்தமன் இருவரும் நீரில் மூழ்கினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இவர்கள் இருவரையும் தேடி வந்தனர். அதில் ஒரு இளைஞர் மட்டும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றொரு இளைஞரின் சடலத்தை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மணவாசியை சேர்ந்த இளைஞரை குளித்தலை மகளிர் போலீசார் கைது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணவாசியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் 25. கூலி தொழிலாளி ஆன இவர் வீரராக்கியத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உடலுறவு கொண்டுள்ளார்.
இதனால் 17 வயது சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மல்லீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.