கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி தாந்தோணி மலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு தாந்தோணிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் உள்ள சேகர், 31/22, த/பெ ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் சேகர் என்பவரது வீட்டில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் சேகரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி தாந்தோணிமலைப் பகுதியில் விற்பனை செய்யும் 1.கார்த்திக், த/பெ ராமதாஸ், முத்துலாடம்பட்டி 2.வெங்கடேஷ் த/பெ குமார், முத்துலாடம்பட்டி 3.முத்துசாமி, த/பெ ஆறுமுகம், விக்னேஸ்வரா நகர் 4.பாக்கியராஜ், த/பெ லட்சுமணன், சத்தியமூர்த்தி நகர் 2-வது கிராஸ் ஆகியோர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குளித்தலை விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலையில் வெள்ள அபாய தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விஏஓ உதவியாளரை தாக்கிய தந்தை மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு வருவதையொட்டி, பொதுமக்கள் ஆற்றிற்கு செல்லாமல் தடுக்க வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளித்தலை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ரத்தினம் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, குடும்பத்தினர் சுற்றுலா சென்று விட்டு காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.
தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என ரத்தினம் அறிவுறுத்தலை கேட்காத சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஏஓ உதவியாளரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த ரத்தினம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஏஓ உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்