கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோரை, காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசி தாக்கியதாகவும்  உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்


இந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்ய சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற 17 வயது பள்ளி மாணவி கடந்த 19-ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை கொண்டார்.


கோவையைத் தொடர்ந்து கரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி  தகவலை சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையில் மாணவியின் தாய் ஏபிபி நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றபோது என் தம்பி, தங்கையின் கணவர் மற்றும் நண்பர்களை காவல் துறையினர் தாக்கினர். என்னையும் தகாத வார்த்தைகளில் பேசினார்கள். பள்ளி மீதுதான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும்போது ஒழுங்காக சென்றவள் அங்கிருந்து வரும்போது அழுதுகொண்டே வந்திருக்கிறாள். பள்ளியில் வேதியியல் ஆசிரியர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பள்ளி நிர்வாக தரப்பிலிருந்து இந்த நிமிடம்வரை யாரும் வரவுமில்லை எங்களை தொடர்புகொள்ளவும் இல்லை” என்றார்.

 

மேலும் படிக்க: