கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி  திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர், லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தபோது லாரியில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.


 


 




விரைந்து வந்த வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறையினர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.


 


 


 




 


இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


டூவீலர் மோதி பெண் படுக்காயம்


குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் பஞ்சாயத்து மேட்டு திருக்காம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா.  மேட்டு திருக்காம்புலியூர் எழுதியாம்பட்டி நெடுஞ்சாலை விஏஓ அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்து டூவீலர் மோதிய விபத்தில் பாப்பா படுகாயமடைந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண