கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி உடையான்தோட்டம் கிராமத்தில் விவசாயிகள் மின் இணைப்பு பெற்று கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து  விவசாயம் பார்த்து வருகின்றனர்.


 




 


இந்த கிணறுகளுக்கு அருகில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வரும்போது நீர் நிரம்பி வழிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் மாயனூர் கதவணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன் மின்மோட்டார்கள் மூலம் கிணறில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.


 


 




 


இந்நிலையில் மின் மோட்டார் இணைப்புகளில் உள்ள ஒயர்கள் மற்றும் மின் கம்பத்திலிருந்து ஸ்விட்ச் பாக்சிற்கு வரும் ஒயர்களை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிச் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகிளிப்பட்டியைச் சேர்ந்த அழகுதுரை,  முருகன், ரவிச்சந்திரன், சண்முகம் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு சொந்தமான மூன்று கிணறுகளில் தல ரூபாய் 5000 மதிப்பிலான  மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 


இதில் சண்முகம் மற்றும் முருகன் ஆகியோரின் விவசாயம் மின் மோட்டார் இணைப்பு ஒயர்களை தொடர்ந்து இரவு இரண்டாவது முறையாக திருடி சென்றுள்ளனர்.


விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் அல்லல் பட்டு போதிய வருமானம் இன்றி தவித்து வரும் அவர்களுக்கு இதுபோன்று மின் இணைப்பு உயிர்களை மர்ம நபர்கள் திருடி செல்வதால் மிகுந்த மன வேதனையில் உள்ளதாகவும் மேலும் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், மகிளிப்பட்டி வாய்க்கால் பாலம் அருகே இருந்து அந்தரப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சிந்தலவாடி ஊராட்சி போர்வெல் குடிநீர் ஆழ்துளை கிணறு இருந்த ஒயர்களையும் திருடிச் சென்றனர்.


 


 




 


 


மகிளிப்பட்டி பகுதிகளில் இது போன்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு லாலாபேட்டை காவல் துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.