கரூர் இசைப் பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை என்றும், ஜாகிர் உசேன் மீது தான் பொய் புகார் அளிக்கவில்லை என்றும்  கரூர் இசை பள்ளி ஆசிரியை சுஜாதா கூறியுள்ளார். 




 


இதுகுறித்து ஆசிரியை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் பள்ளியில் ஆய்வுக்கு  ஜாகீர் உசேன் வந்த போது என்னிடம் நடந்த விதம் மிகவும் கண்டிக்க தக்கது. இதுகுறித்து மார்ச் 8 ந் தேதி சென்னையில் புகார் அளித்தேன். விசாகா கமிட்டி மூலம் நேர்மையாக விசாரணை நடைபெறும் என்று நம்பி இருந்தேன்.  ஆனால், இன்று தொலைக்காட்சிகளில் எனது புகார் பொய்யானது என தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்தேன்.  இது முற்றிலுல் தவறானது. மிக மன உளைச்சல் ஏற்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழக முதல்வர் இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.




 


மேலும் கூறுகையில், ”ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், மாணவிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். எனக்கு நீதி வழங்க வேண்டும் என முதல்வரை கேட்டு கொள்கிறேன். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளேன். நான் கரூர் இசைப்பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியராக 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி எனது பள்ளியில் நடந்த ஆய்வின் போது   தமிழ்நாடு கலைபண்பாட்டுத் துறை கலையியல் அறிவுறைஞர் ஜாகீர் உசேன் அவர்கள் மீது சென்னை கலை பண்பாட்டுத் துணை இயக்குநரிடம் எழுத்து மூலமாக 22.02.2022 அன்று நடந்த சம்பவத்தை 08.03.2022 அன்று புகார் அளித்திருந்தேன்.




 


அதன் அடிப்படையில், கடந்த 31.03.2022 அன்று நேரில் சந்தித்தேன். அதன்பின் 05.04.2022 அன்று விசாரணைக்குச் சென்றேன். அதன்பின் இரண்டாவது கட்டமாக 22-04-2022 அன்று விசாரணைக்கு சென்றேன். இதனிடையே இன்று தொலைக்காட்சிகளில் எனது புகார் தொடர்பாது விசாகா கமிட்டி விசாரணை மூலம் புகார் பொய்யானது என செய்தி ஒளிபரப்பானதை பார்த்தேன்.  இது சம்பந்தமாக ஊடக நண்பர்களுக்கு மறுப்பு அறிக்கையினை வழங்குகின்றேன்.


கரூர் இசைப்பள்ளியில் நடந்த சம்பவம் முழுக்க முழுக்க உண்மை. உண்மைக்கு புறம்பான தகவல்களை நான் புகாரில் தெரிவிக்கவில்லை. எனது புகாரில் இருந்து ஜாகீர் உசேனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது. மேலும்,  இனி சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்று ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். 


தமிழகத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த இசைப்பள்ளி ஆசிரியர் இசைப்பள்ளி நடனக் கலைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில் மீண்டும் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தும் அளவிற்கு, காரைக்குடியில் இன்று இசைப்பள்ளி ஆசிரியர் அன்று நடந்த சம்பவத்தை பற்றி முதல் முறையாக செய்தியாளர் சந்தித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண