கரூரில் பழுதடைந்த 3 மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர போர்டு தம்பதியினர் மீது விழுந்து ஒருவர் படுகாயம்: போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை.
கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் மருந்து கடை, செல்போன் கடை, போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இதில் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் மருந்து கடை அமைந்துள்ளது. அப்துல் ஹக்கீம் இம்ரான் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில், செல்போன் கடையின் பிரம்மாண்ட ஃபைபர் விளம்பர போர்டு அமைந்துள்ளது.
மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
அப்போது அந்த கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்த தம்பதியர் மீது விளம்பர போர்டு விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூரில் செல்போன் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.
கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜேஷ் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, இன்று அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதை பார்த்த, பொதுமக்கள் கரூர் தீயணைப்பு படையினர் மற்றும் கரூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மளமளவென பரவிய தீயை அணைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.
கடையில் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது .செல்போன் பேட்டரி வெடித்த காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர போலீசார் கட்டிடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, கட்டிடத்தின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடத்தில், அனுமதியின்றி விளம்பர போர்டு வைக்கப்பட்டதால் நடந்துள்ள அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.