கரூரில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மூலம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 45 நபர்கள், ரங்கநாதன் என்பவர் தென்னக ரயில்வேயின் தலைமை கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபிசராக ரயில்வேயில் பணியாற்றி வருவதாக கூறி அவர்களது அடையாள அட்டையை காட்டியும், ரயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்றும், கருப்பண்ணன் மூலம் 45 நபர்கள் ரயில்வேயின் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றி ரூ.2,07,00,000/ (இரண்டு கோடியே ஏழு இலட்சம்) பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி உள்ளார். 





பின்னர் குறிப்பிட்ட நாட்களில் வேலை வாங்கித்தராமலும் பணத்தை திருப்பி தராமலும், காலம் தாழ்த்தி வந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் கரூர் மாவட்ட குற்றவியல் பிரிவில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 




இந்த நிலையில், விசாரணையில் ஏற்கனவே ரெங்கநாதன் என்பவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்ட குற்றபிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல நபர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வகையில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.


இந்த நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் கூட்டு சதியில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, ரமேஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண