கோவையில் தொடர்ந்து கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பிரபல எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோ வழக்கு பதிவு செய்து இரண்டு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு கரூர் நகர  சிறையில் அடைத்தனர்.இன்னிலையில் 15 நாட்கள் காவல் முடிந்த பின்னர் இன்று கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக வழக்கு விசாரணை இன்று வந்தது.




இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் பிரபல எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் இன்று காலை காவல் அங்கிருந்து புறப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் காவல் வாகனத்தில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் சற்று நேரத்தில் மகிளா கோர்ட்டில் பாலியல் துன்புறுத்துதல் வழக்கில் கைதான மருத்துவர் ரஜினிகாந்த் பெயரை வாசிக்க உடனே ஆஜரானார்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 




சில நொடிகளில் மகிளா கோர்ட் நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, மருத்துவர் ரஜினிகாந்தை மீண்டும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் காவல்துறையினர் அவரை அழைத்து வந்து வாகனத்தில் அமர வைத்தனர். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் தனது மகளுக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.




தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள மருத்துவர் ரஜினிகாந்த் 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு மீண்டும் 15 நாட்கள் காவல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் ரஜினிகாந்த் இன்று கரூர் கோர்ட்டுக்கு வருகை தகவலறிந்த மருத்துவமனையில் சில நிர்வாகிகள் அவரை வந்து நேரில் சந்தித்தனர். இந்த வழக்குக்காக சென்னையில் இருந்து மருத்துவர் ரஜினிகாந்த் வழக்கறிஞர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.