கரூர் அருகே டிஎன்பிஎல் காகித ஆலை ஸ்டோர் மேலாளர் வீட்டில் 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர்.


 




கரூர் மாவட்டம் வேலயுதம்பாளையம் பகுதியில் உள்ள டிஎன்பிஎல் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஆலை நிர்வாக அலுவலக குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சென்னையில் மகள் படிப்பிற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 115 பவுன் தங்க நகை மற்றும் 600 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. அண்ணாதுரை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 




 


வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் போலீசார் திருட்டுக் கும்பலை தேடி வருகின்றனர்.  வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் 115 பவுன் தங்க நகையின் மொத்த மதிப்பு 17 லட்சத்து 63 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளனர்.  ஒரு பவுன் தங்க நகையின் மதிப்பு 40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். காவல்துறை சார்பில் 115 பவுன் தங்க நகை மதிப்பு 46 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் நிலையில் குறைந்த அளவு மதிப்பு மட்டுமே காட்டியுள்ளனர். வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள டிஎன்பிஎல் குடியிருப்பில் தங்க நகை திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் தகவல் தர மறுக்கின்றனர்.


 





 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண