காரைக்காலில் உள்ள பிரபல நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிச்சென்ற பெண்ணை காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.

 

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் வீதியில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. அங்கு மாதம் இருமுறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். அந்தவகையில் நகைகளை சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளனர். அப்போது கடந்த 14ந் தேதி கடையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் வந்து அரை பவுன் தங்க மோதிரத்தை வெகுநேரம் பார்த்துள்ளனர். பிறகு அந்த மோதிரத்தை கர்ச்சீப் ஒன்றில் மறைத்து, பிறகு வருகிறோம் என கூறி நகைகள் எதுவும் வாங்காமல் செல்வது தெரியவந்தது. 

 

தொடர்ந்து கடை உரிமையாளர் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் மோதிரத்தை திருடி சென்ற பெண் ஏற்கெனவே தமிழகப்பகுதியில் இது போல் கடைகளில் நகை வாங்குவது போல் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது என்று தெரியவந்தது. அதன்பேரில் திருவாரூர் ஐயம்பேட்டையை சேர்ந்த தலலட்சுமியை (45) நகர போலீசார் கைது செய்து, மோதிரத்தை மீட்டனர்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.