கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம்  சானல் கரையை சேர்ந்தவர் டாக்டர் ஆபிரஹாம் ஜோயல் ஜேம்ஸ். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் காவல் நிலையில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது  வீட்டில் உள்ள லாக்கரில்  இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் 50 பவுன் தங்க  நகை ஒரு வைர நெக்லஸ்  மற்றும் கம்மல் ஆகியவைகளை யாரோ  கொள்ளையடித்து சென்றுவிட்டதாக்கவும் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது.





மருத்துவர் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெருவிளை பகுதியை சேர்ந்த ஜெயசுபா மற்றும் பள்ளவிளை பகுதியை சேர்ந்த ஐர்வின் (35) ஆகியோர் மருத்துவர் வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் லாக்கரில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர் அதன் பிறகு இருவரும் சேர்ந்து கேரளாவில் தங்க நகைகளை விற்பனை செய்துவிட்டு பணத்தை தங்களுக்குள் பங்குவைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் டாக்டர் வீட்டிலேயே வேலை பார்த்து வந்தனர் இந்நிலையில் கேரளாவில் தங்கத்தை விற்ற ஜோடிகள் வைர நகைகளை விற்க முடியவில்லை அதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே விற்க முடியும் என பலரும் கூறியுள்ளனர்.




இதற்கிடையே இவர்களிடம் வைர நகைகள் இருக்கும் தகவல்கள் பரவ தொடங்கியது  இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது இதனை அடுத்து ஓட்டுநர் ஐர்வின் மற்றும் ஜெயசுபா ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 42 சவரன் தங்க நகை, வைர நெக்லஸ் மற்றும் வைர கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வைரத்தை திருடி வைரதால் மாட்டிய கொள்ளை ஜோடிகள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர்.