கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சோனியா(34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயராஜ் ஓட்டுநர் தொழிலும் சோனியா அழகு நிலைய தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று சோனியா தனது இரண்டாவது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சுசீந்திரம் பகுதியில் வந்த போது, அவரை பின் தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஜெயராஜ் மனைவியை வழிமறித்து அரிவாளால் மகன் கண்முன்னே வெட்டியுள்ளார்.

 

இதில் கன்னம், கை, கால் உட்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு சோனியாவை மீட்டு மருத்துவமறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயராஜை பிடித்து சம்பவ இடம் வந்த சுசீந்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த மனைவியை மகன் கண்முன்னே கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனியா படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். ஜெயராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.



 


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு - மாவட்டம் முழுவதும் 1400 சுகாதாரத்துறை உழியர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்தடுத்து உள்ளவர்களும் காய்ச்சலால் அவதிப்படும் நிலை உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பின் காரணமாக மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.


 

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தினமும் வழக்கமாக 1500 பேருக்கு மேற்பட்டோர் புற நோயாளி யாக வந்து மருந்து வாங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருந்து வாங்கி செல்கிறார்கள். இதில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் ஆஸ்பத்திரியில் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கன்னியா குமரி, குளச்சல், குழித்துறை அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1400 சுகாதாரத்துறை உழியர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது மாவட்டத்தில் காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க போதிய அடிப்படை மருத்துவ கட்டமைப்பு குமரி மாவட்டத்தில் உள்ளது மாவட்டத்தை பல மண்டலங்களாக பிரித்து காய்ச்சல் சோதனை செய்யப்பட்டு வருகிறது பொதுமக்களுக்கும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது நோய் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.