கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குடும்ப தகராறு காரணமாக தனது சொந்த சித்தப்பா சுரேஷ் என்பவரை வெட்டி படு கொலை செய்த அருண் ஜெனிஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கொத்தங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது அண்ணன் காஸ்டியன் என்பவர் உடன் ஏற்பட்ட நிலத்தகராறில் காஸ்டியன் மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் உயிர்தப்பிய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சுசீந்திரம் அருகே சுரேஷ் மற்றும் காஸ்டியன் மகனான அருண் ஜெனிஸ் என்பவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண் ஜெனிஸ் தனது சித்தப்பாவான சுரேசை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுசீந்திரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அருண் ஜெனிஸ் ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண