பென்ஸ் கார்

 

காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் குலைக்கரை அருகே பென்ஸ் காரில் வந்த இளம் நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்த பொழுது, திடீரென அவர் 70 லட்சம் மதிப்பிலான தனது சொந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊத்தி எதிர்த்துள்ளார். குளக்கரை அருகே கார் ஒன்று எரிவதை கண்டால் பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல் துறையினருக்கு தெரிவித்தனர் 

 



தாலுகா காவல்துறையினர் விசாரணை

 


சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ பற்றி எரிந்த காரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் (28) என்பவரது கார் என்பது தெரியவந்தது.

 


 



கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் 

 


கவின் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில்,  மருத்துவம் பயின்று கடந்த ஆண்டு முடிவு பெற்றுள்ளார். இந்நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த உடன் படிக்கும் மாணவி ஒருவருடன்  பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் காதலியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரனமாக ஆத்திரம் அடைந்த கவின்  தனக்கு சொந்தமான சொகுசு கார் (பென்ஸ்) 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்