காஞ்சிபுரம் 


காஞ்சிபுரம் மாநகராட்சி பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சந்தானத்திற்கு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு உள்ளார்.


இருவரும் இரண்டாம் திருமணம்


கணவன் மனைவி இருவருமே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த நிலையில், வேண்டா தற்போது 6 மாத கர்ப்பமாக இருந்து உள்ளார். இந்த நிலையில் சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறை இரு குடும்பத்தினரும் சமாதானம் செய்து வைத்து உள்ளனர்.


அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை


இந்நிலையில் இன்றும் சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாத நிலையில் தொடர்ந்து தகராறு செய்து வரும் சந்தானம் மீது ஆத்திரமடைந்த வேண்டா திடீரென அம்மிக்கல்லை தூக்கி சந்தானம் தலை மீது போட்டு கொலை செய்துவிட்டு தனது வெறி அடங்காததால்   கத்தியால் சந்தானத்தின் கழுத்தையும், அறுத்து, பிறப்புறுப்பையும் அடுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.


தானும் தற்கொலை செய்து கொண்ட மனைவி


பின்னர் தானும் வாழ பிடிக்காமல், தன்னுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும், தான் பணம் கொடுத்து வைத்துள்ளவர்களின் பெயரைக் குறிப்பிடும், வாங்கியுள்ள கடன்கள் குறித்தும், அதனை எவ்வாறு கட்டுவது என்பது குறித்தும் தனது தம்பிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, கட்டிய கணவன் தொடர்ந்து துன்பப்படுத்தி வந்ததால் அவனை தனது கையால் கொலை செய்ததுதான் தனக்கு ஆறுதல் என கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு, வேண்டாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இச்சம்பவத்தை  அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், கணவன் மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண