காஞ்சிபுரம் ராயன் குட்டை பகுதியை சேர்ந்த டில்லிபாபு , என்பவர் கோவில் மர சிற்பங்களை சீரமைப்பது, வண்ண ஓவியங்கள் வரைவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். அவ்வப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பல்வேறு கோவில் தொடர்பான கேள்விகளையும் எழுப்பி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற வரதராஜ் பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் மூலவர் தங்க கோபுரம் அமைத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கேள்விகள் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில், தங்க கோபுரம் விவகாரத்தில் மோசடி நடந்துள்ளதாக "இந்து அறநிலையத்துறைக்கு" புகார் அளித்திருந்தார். சுமார் 70 கிலோ வரை தங்கம் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் 70 கிலோ தங்க மோசடி விவகாரம் தொடர்பாக கடந்த, மே மாதம் 15 ஆம் தேதி இணை ஆணையர் முன்னணியில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பொழுது புகார் தாரர்களுக்கு இருக்கை அளிக்கவில்லை, மற்றும் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என புகார்தார டில்லி பாபு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் 70 கோடி ரூபாய் தங்கம் மோசடி விவகாரத்தில், இணை ஆணையர் வான்மதி கூடுதல் துணை ஆணையர் ( நகை சரிபார்ப்பு) அலுவலரை நியமித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இது ஒரு புறம் இருக்க, டில்லி பாபு மாநில மனித உரிமை ஆணையத்தில், புகார்தாரருக்கு தர வேண்டிய அடிப்படை மரியாதையை கூட கொடுக்கவில்லை மற்றும் தன்னை உரிமையில் பேசியதாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வீடியோவையும் டில்லிபாபு வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக , இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்