காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


ராஜீவ் காந்தி நினைவிடம் 


காஞ்சிபுரம் (Kanchipuram) :  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் (rajiv gandhi memorial sriperumbudur ) அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது , தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து உயிர் நீத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு நினைவகத்தை சுற்றி பார்த்து செல்வது வழக்கம்.




மத்திய பாதுகாப்பு படை போலீசார்

 

இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்ற கார் ஒன்று ராஜீவ் காந்தி நினைவுகள் முன்பு நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் காரில் இருந்து சூட்கேஸை ஒன்றை நினைவகம் முன்பு வீசிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றதாக தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி எழும்பியுள்ளது. இதனால் அச்சமடைந்த போலீசார் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


 

மோப்பநாய் உதவியோடு

 

அதன் பேரில் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மர்ம நபர்கள் வீசி சென்ற சூட்கேஸ் அருகே யாரும் பொதுமக்கள் நெருங்காத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து மோப்பநாய் உதவியோடு சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் சூட்கேஸை திறந்தனர்.

 

"டம்மி பாவா "

 

இந்தசூட்கேசில் ஆச்சி மிளகாய் தூள் பொடி, பல் துலக்கும் குச்சி, பேஸ்ட் தைலம், என போன்ற பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் இந்த சூட்கேஸ் யாராவது வீசி சென்றார்களா அல்லது எப்படி அந்த பகுதிக்கு வந்தது என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.