பயிற்சி மைதானங்கள்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம். இங்கு கால்பந்து, ஹாக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளுக்கான பயிற்சி மைதானங்கள் உள்ளது. நாள்தோறும் இங்கு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
வீட்டிற்கே வர வைத்து
இந்த நிலையில் ஸ்குவாஷ் பயிற்சியை மேற்கொண்ட காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் கேட்டு பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும் , அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு அந்த விளையாட்டு வீராங்கனைக்கு தெரிவித்துள்ளார்.
தப்பி பிழைத்த வீராங்கனை
இதன் பேரில் அங்கு சென்ற விளையாட்டு வீராங்கனையை பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார். அதிலிருந்து சாதுரியமாக விளையாட்டு வீராங்கனை தப்பி முதல் மாடியில் இருந்து கீழே குதித்து அப்பகுதி பொதுமக்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை
இதனையடுத்து, இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார், அதன் அடிப்படையில் பயிற்சியாளரை விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் கைது செய்து , அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கற்பழிப்பு முயற்சி மேற்கொண்டதாக இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ரயில்வே சாலையில் சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்