காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு.
காஞ்சிபுரம் தாலுகா போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளி. கூலி தொழிலாளியான ராஜா வீதியில் நின்று கொண்டிருந்தபொழுது அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சய் வீட்டருகே சென்று ராஜா வேகமாக வந்ததை தட்டி கேட்டு உள்ளார் இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து வந்து ராஜாவை வெட்டியுள்ளார்.இதனால் படுகாயம் அடைந்த ராஜா சத்தம் போடவே அருகில் இருந்த கிராம மக்கள் சஞ்சயை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர் இதனால் சஞ்சையும் படுகாயம் அடைந்தார்.
பின்னர் இருவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, இதுகுறித்து புகார் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்