காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அவ்வரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே ஏறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் பேருந்து ஓட்டுநர்.
இதனால் கொந்தளித்த மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்துவிட்டு கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து பொதுமக்கள் ஒன்று சேரவே அங்கிருந்து மாணவர்கள் நான்கு பேரும் தப்பியுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனை பிடித்த 4 0வயது மதிக்கதக்க ரஜினி என்பவரை அம்மாணவன் தாக்கிய நிலையில், இதில் தலையில் பலதத காயமுற்று ரத்தம் சொட்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களே அம்மாணவனை பிடித்து சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி மாணவனால் தாக்கப்பட்டவர் மற்றும் பொதுமக்கள் மாணவனை பிடித்த காட்சிகள் சமூக வளைதளங்களில் தற்போது வைராக பரவி வருகிறது. தமிழகத்தில் அண்மை நாட்களாகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கின செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகும் வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி அடங்கிய நிலையில் மீண்டும் தற்போது தலையெடுக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கிச் செல்லும் வீடியோக்கள் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளத்தில் வைரலாக பதவி வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பேருந்தில் சேட்டை செய்து பொதுமக்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்