பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபால் 

 

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல்களை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். அதுபோன்ற உண்மைச் சம்பவங்கள் சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபாலன்.

 

நில அபகரிப்பு, கொலை,‌ ஆள்கடத்தல் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டுவந்த ஸ்ரீதர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்தார். காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாகவும், நிழல் உலக தாதாவாகவும் வர்ணிக்கப்பட்ட ஸ்ரீதர் தனபாலன், கம்போடியாவில் விஷம் குடித்து சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். 

 


 

இவரது தற்கொலையால் பிரச்னை ஓய்ந்தது என காவல் துறை நினைத்திருந்த சமயத்தில், அடுத்த ஸ்ரீதர் தனபாலன் யார்? அவரின் இடத்தை யார் பிடிப்பது என்ற அதிகாரப்போட்டி, ரவுடி கும்பல் இடையே தொடங்கியுள்ளது. ஸ்ரீதரின் மைத்துனரான தணிகா என்ற தணிகாசலமும், ஸ்ரீதரிடம் கார் ஓட்டுநராக இருந்த தினேஷ் மற்றும் தியாகு ஆகியோர் குழுக்களாக பிரிந்து, அடுத்த ரவுடி சாம்ராஜ்ஜியத்திற்கான அத்தியாயத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்துள்ளனர்.

 


தனிப்படை ஏடிஎஸ்பி

 

மேலும் பிரபல ரவுடி தியாகுவின் கூட்டாளிகளான பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா காஞ்சிபுரத்தில் தியாகுவின் பெயரை பயன்படுத்தி கொலை, கொலை முயற்சி, குற்றவாளிகள். காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளை பிடித்து வரும் தனிப்படை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சுற்றி வளைத்து வரும் நிலையில் பல்வேறு குற்ற குற்றப் பின்னணியில், உள்ள குற்றவாளிகளை தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கத்தியை காட்டி மிரட்டல்

 

இந்நிலையில் சகோதரர்கள் இருவர் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் மேம்பாலத்தின் இருப்பதாக கிடைத்த தகவலின்படி  போலீசார் பிடிக்கும் முயன்ற பொழுது , குற்றவாளிகள் போலீசை பார்த்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்  பதிலுக்கு போலீசார் துப்பாக்கி காட்டி பிடிக்க முயன்ற பொழுது, மேம்பாலத்தில், மேலே இருந்து இருவரும் குதித்து தப்பிக்க முயன்ற பொழுது இருவருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

 

துப்பாக்கி முனையில்

 

காயம் அடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுபவித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து சிவகாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பிக்க மேம்பாலத்தில், இருந்து கை, கால் முறிவு ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.