ஶ்ரீபெரும்புதூர் அருகே திருமங்கலம் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்து கால்கள் கட்டப்பட்டு  கால்வாயில் கண்டெடுப்பட்டுள்ளது.


காணாமல் போன கர்ப்பிணி பெண்


காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி ( வ/32 ) மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து வருகிறார்.


 




இந்தநிலையில் தேவி நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று காலை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தார். இந்த நிலையில் இன்று திருமங்கலம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியது. உடனே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் உள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருந்தனர்.


 கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்


அப்போது கால்வாய் சிலாப்க்கு அடியில்  பெண் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஏ.எஸ்.பி., உதயகுமார் தலைமையிலான போலீசார் கால்வாய் சிலாப்க்கு அடியில் சிக்கி கொண்ட சடலத்தை கடப்பாரை கொண்டு சிலப்பை அகற்றி பார்த்தபோது கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இறந்த நிலையில், இருந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 




முதல் கட்ட விசாரணையில், தேவி கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும், கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக இருந்ததால் கொலை  என தெரியவந்தது. கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டு சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


 


இந்த கொலை தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உள்ளோம். பெண் கர்ப்பமாக இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே புகார் வந்திருந்ததால் உயிரிழந்த பெண்ணை உடனடியாக அடையாளம்  காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையை வைத்து பார்க்கும் பொழுது கொலை சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.ஆனால் கொலை இந்த இடத்தில் நடைபெற்றதா என்பது குறித்து அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வரும்.ஒருவேளை வேறு எங்கேயாவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் பெண்ணின் உடலைக் கொண்டு வந்து வீசி விட்டு சென்றிருக்கலாம்  என காவல்துறையினர் தெரிவித்தனர்