காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட துலங்கும் தண்டலம் கிராமத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்களின் புகாரை அடுத்து திருப்புகழி பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பக்ரி என்பவர் டிரான்ஸ்பார்மரில் ஏரி பணி செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் டிரான்ஸ்பார்மரிலேயே உடல் கருகி பலியானார். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து டிரான்ஸ்பார்மரில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 



 

டிரான்ஸ்பார்மரில் பகுதி சரி செய்ய போது மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த மின் ஊழியர் பக்கிரிக்கு மனைவியும் இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் என 4 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார கம்பத்திலேயே மின்சார ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் சரியாக மின் இணைப்பை துண்டிக்காமல், சரி செய்யும் பணியில் ஈடுபட்டதால் உயிரிழப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட வாலாஜாபாத்தில் மின் கம்பத்திலேயே மின் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் மற்றொரு மின் ஊழியர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



 

ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இதே போன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றது. நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். 46 வயதான மோகன்ராஜிற்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று நள்ளிரவு அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது, சாலை விரிவாக்க பணிக்கு சென்ற ஆர்.ஆர் இன்ஃபிரா சொலுஷன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.



 

மின்வாரிய அலுவலகத்தில் நைட் டூட்டி செய்யும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்து கொண்டிருந்தனர்.  வயர்மேன் மோகன்ராஜ் மதுபானக் கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றி அவளூர் மார்கமாக செல்லும் லைனை இயக்க முயன்ற போது திடீரென மோகன்ராஜ் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் மின் கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைகண்டு அதிர்ச்சியுற்ற சக மின் ஊழியர்கள் வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தலைமை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மின் கம்பத்தில் ஏறி மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர்.

 

வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு பணியின் போது மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.