காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்ய கூலிப்படையை பயன்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரியாணி மாஸ்டர் உடன் பவானி கள்ளக்காதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (47). இவரது மனைவி பவானி (38). இருவரும் அதே பகுதியில் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளனர். இந்த கடையில் திருவாரூரை சேர்ந்த மதன்ராஜ் (36) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். 

இந்தநிலையில், பிரியாணி மாஸ்டர் மதன்ராஜ்க்கும் பவானிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன் ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். மேலும் கணவன் மற்றும் குடும்பத்தினர் பவானியை கண்டித்துள்ளனர். திருமணம் தாண்டி உறவில் இருக்கக் கூடாது, என அறிவுரை வழங்கியுள்ளனர்.

பிரியாணி மாஸ்டருடன் பவானி உல்லாசம்

கணவர் மற்றும் குடும்பத்தினரின் அறிவுரையை மீறி இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.  

இந்நிலையில் கள்ள காதலுக்கு இடையூறாக உள்ள ஹரி கிருஷ்ணனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி மதன்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் பைக்கில் சென்ற போது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக ஹரி கிருஷ்ணன் உயிர் தப்பினார். 

மனைவியை கைது செய்த போலீஸ்

இதை அடுத்து இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஹரி கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி பவானியை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினரை கைது செய்தனர். 

காவல்துறைக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்

இந்தநிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில், காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய கள்ளக்காதலன் மதன் கூலிப்படையை ஏவி ரூ.15 லட்சம் பேசி கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்ட ஹரி கிருஷ்ணன் தப்பி ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் புகார் அடித்தார்.

புகாரின் அடிப்படையில் மனைவி பவானியை நேற்று கைது செய்த நிலையில், இன்று கள்ளக்காதலன் மதன் மற்றும் கூலிப்படைகள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், விஜய், விக்னேஷ் ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.