கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்ற கூலித்தொழிலாளியின் மகன் வெங்கடேஷ் வயது (14), இந்த சிறுவன் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவனும் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி ஏமப்பேர் எரிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார் இச்சிறுவன். அப்போது அங்கு ஏற்கனவே கொட்டப்பட்ட நெருப்புடன் கலந்த சாம்பலில் சிறுவன் வெங்கடேஷ் கால் வைத்துள்ளார். சுடவே எதிர்பாராத விதமாக தவறி அந்த நெருப்பில் விழுந்துள்ளார். விழுந்து பயங்கர தீ காயம் அடைந்தார் சிறுவன்.
தீக்காயமடைந்த சிறுவன் பிறகு தானே எழுந்து வீட்டிற்கு ஓடி சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவத்தை அவர்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்ன்.அதன் பிறகு சிறுவனை வெங்கடேஷ் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் , பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,
அதன் பின்னர் அங்கிருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வெங்கடேஷ்! இன்று திடீரென சிகிச்சை பலனின்றி இறந்து போனார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை கந்தசாமி கள்ளக் குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதில் ஏமப் பேர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் சிவா என்பவர் சுடு சாம்பலை டிராக்ட ரில் கொண்டு வந்து ஏமப்பேர் ஏரியில் கொட் டியுள்ளார்.
சுடு சாம்பல் கொட்டியது தெரியாமல் தனது மகன் அதில் தவறி விழுந்து தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளார். சப்-இன்ஸ் பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலை யில் பள்ளி மாணவன் உயிரிழந்ததையடுத்து கள்ளக்குறிச்சி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் , ஏரியில் சுடு சாம் பலை கொட்டிய டிராக்டரை கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு பகுதியில் மில்லில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து அதனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சுடு சாம்பலில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.