கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்றபொழுது, கோவிலின் உள்ளே வழிபடச் சென்றார். அப்பொழுது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அதை எடுத்துச் செல்லுமாறு கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18-ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி கூத்தாண்டவருக்கு தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்கு அடுத்த நாள் திருத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதனையெட்டி திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கோவிலுக்கு வருகை தந்தார். அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறினார்.


அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச்சென்றார், இந்த சம்பவத்தை பார்த்த ஆய்வுக்காக காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமார் கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்து வந்த அவர் கனியாமூர் ஸ்ரீமதி உயிரிழப்பு கலவரத்தின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்து குறிப்பிடத்தக்கது.


தனது காலணியை உதவியாளரை வைத்து எடுக்க சொன்ன ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண